ஐபோனுக்காக பெற்ற பிள்ளையை விற்ற தம்பதியினர்
இந்தியாவின் மேற்கு வங்கத்தில் இருந்து சமூக வலைதளங்களுக்கு அடிமையான தம்பதியினர் தங்கள் 8 வயது குழந்தையை பணத்திற்காக விற்றதாக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
அந்த பணத்தில் ஐபோன் 14 மொபைல் போன் வாங்குவதற்காக ஷாதி மற்றும் ஜெயதேவ் என்ற தம்பதியினர் தங்கள் மகனை விற்றது தெரியவந்துள்ளது.
சமூக ஊடகங்களில் வீடியோக்களை வெளியிட இவ்வாறு மொபைல் போன் வாங்கியுள்ளனர். இந்த ஜோடி வங்காளத்தில் நடந்து செல்லும் காட்சிகளை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டது.
மகன் இல்லாமல் துக்கப்படுவதற்குப் பதிலாக, அக்கம்பக்கத்தினர் அதிக பணம் செலவழித்து போன் வாங்கியது குறித்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், தம்பதியினர் தங்கள் குழந்தையை பணத்திற்காக விற்றது பொலிசாருக்கு தெரியவந்துள்ளது.
பின்னர், குழந்தையின் தாயையும், குழந்தையை வாங்கிய பெண்ணையும் பொலிஸார் கைது செய்தனர்.
குழந்தையின் தந்தை பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கு முன்னர் தமது 7 வயது மகளை விற்பனை செய்ய தந்தை முயற்சித்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.