ஆபிரிக்காவில் மனித கடத்தல்காரர்களிடம் சிக்கிய இலங்கையர்கள் குழு ஒன்று மீட்பு
சர்வதேச பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம், சியரா லியோனில் கடத்தல்காரர்களிடம் சிக்கிய 15 இலங்கையர்கள் விசேட பொலிஸ் நடவடிக்கையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மனித கடத்தல் மற்றும் புலம்பெயர்ந்தோர் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கையில் உலகின் பல்வேறு நாடுகளில் 1,000 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் ஆயிரக்கணக்கான கடத்தல்களால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் இன்டர்போல் அறிவிப்பை வெளியிட்டது.
இதற்கிடையில், லோமில் உள்ள ஒரு ஹோட்டலில் சோதனையின் போது, நைஜீரியாவில் பாலியல் தொழிலுக்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட மேலும் 30 பேரை டோகோலிய அதிகாரிகள் காப்பாற்ற முடிந்தது.
வெளிப்படுத்தப்பட்ட வழக்குகளில் பல பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவர்கள் இருந்ததாக கூறப்படுகிறது.