இலங்கை காவல் நிலையங்களில் 20,000 பணியிடங்கள்!
பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிலான் அலஸ் தெரிவித்துள்ளார்.
உத்தியோகத்தர்களின் பதவி விலகல், ஓய்வு மற்றும் இயலாமை போன்ற காரணங்களால் இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனைக் கருத்தில் கொண்டு 20,000 பொலிஸ் உத்தியோகத்தர்களை புதிதாக இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்காலத்தில் ஏனைய அதிகாரிகளின் பற்றாக்குறையும் தீர்க்கப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
(Visited 17 times, 1 visits today)





