இலங்கை கால்பந்து சம்மேளனத்திற்கு விதிக்கப்பட்ட கடுமையான நிபந்தனை! சர்வதேச கால்பந்து சம்மேளனம்
சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA) மற்றும் ஆசிய கால்பந்து கூட்டமைப்பு (AFC) ஆகியவை கடுமையான நிபந்தனை அடிப்படையில் அதிகாரப்பூர்வ உலகக் கோப்பை டிராவில் “இலங்கை”யை அங்கீகரித்து சேர்த்துள்ளன.
இவை தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜனாதிபதி மற்றும் அதன் குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உலகக் கோப்பை தகுதிச் சுற்று ஆட்டம் அக்டோபர் 12 மற்றும் அக்டோபர் 17, 2023 ஆகிய திகதிகளில் நடைபெறும்.
இதன் மூலம், இலங்கை கால்பந்து சம்மேளனம் (FFSL) தனது தேர்தலை இந்த உலகக் கோப்பை போட்டிக்கு குறைந்தது 10 நாட்களுக்கு முன்னதாக நடத்த வேண்டும்.
தேசிய கால்பந்து நிர்வாகக் குழு இந்த நிபந்தனைக்கு இணங்கத் தவறினால், இலங்கை தகுதிச் சுற்றுக்கு விளையாட சர்வதேச கால்பந்து சம்மேளனம் அனுமதிக்காது.
இதற்கிடையில், விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க செவ்வாய்க்கிழமை (ஜூலை 25) FFSLக்கான தேர்தலை நடத்துவதற்காக மூவரடங்கிய குழுவொன்றை நியமித்தார் என்பது குறிப்பித்தக்கது.