பொலிஸ் காவலில் இருந்துபோது உயிரிழந்த பெண்ணின் மரண விசாரணை நிறைவு!

பொலிஸ் காவலில் இருந்தபோது உயிரிழந்த ராஜகுமாரி என்ற பெண்ணின் மரணம் குறித்து மரண விசாரணை தீர்ப்பு வரும் ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (26.07) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
குறித்த பெண் வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பின்னர், சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார்.
இது குறித்த மரண விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மெரில் ரஞ்சன் கல்கஹேவாவினால் நடத்தப்பட்ட சாட்சிய விசாரணை இன்று நீதிமன்றில் நிறைவடைந்தது. அதன் பின்னரே மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
(Visited 10 times, 1 visits today)