ஐரோப்பா

கிரீஸ் காட்டுத் தீயை அணைக்கப் போராடிய வீரர்களுக்கு நேர்ந்த பரிதாபம்

கிரீஸ் காட்டுத் தீயை அணைக்கப் போராடிய வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தீயை அணைக்கும் பணிகளில் ஈடுப்பட்டிருந்த விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதால்அதன் 2 விமானிகள் உள்ளிட்ட 3 பேர் கொல்லப்பட்டனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தீ ஏற்பட்ட பள்ளத்தாக்குக்கு அருகே அந்தக் கனடிய விமானம் விழுந்து நொறுங்கியது.

மரம் ஒன்றின் மீது மோதி அந்த விமானம் விழுந்து நொறுங்கியதைக் காட்டும் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.

உயிரிழந்த விமானிகள் கிரேக்க விமானப்படையின் உறுப்பினர்கள் என்று தற்காப்பு அமைச்சு கூறியது. அவர்களது மரணத்தை அடுத்து 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

மற்றவர்களின் உயிரைக் காக்கப் போராடி அவர்கள் தங்களது உயிரைத் தியாகம் செய்துவிட்டதாகக் கிரேக்கப் பிரதமர் அறிக்கையில் கூறியுள்ளார்.

விமானிகள் தவிர்த்து 3ஆவது நபரின் உயிரற்ற உடலும் மீட்கப்பட்டது.

அது கடந்த ஞாயிற்றுக்கிழமையில் இருந்து காணாமல் போனவர் என கூறப்பட்டவரா என்பது இன்னும் உறுதிசெய்யப்படவில்லை.

(Visited 14 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!