ஆட்டம் கண்டுள்ள பிரித்தானிய அரசாங்கம்
பிரித்தானிய அரசியலில் மீண்டும் ஒரு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதுவும் இன்று நடைபெற்ற இடைத்தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சியை தோற்கடித்து தொழிற்கட்சி வெற்றி பெற்றுள்ளது.
மேற்கு லண்டன், நோர்த் யோர்க்ஷயர் உள்ளிட்ட 03 தொகுதிகளில் நடைபெற்ற இத்தேர்தலில் ஆளும் கட்சி ஏற்கனவே இரண்டில் தோல்வியடைந்துள்ளது.
இது இடைத்தேர்தல் என்றாலும் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் இதன் விளைவு நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.
மேலும், போரிஸ் ஜான்சன் பிரதமர் பதவியை விட்டு விலகி பிரதமரான ரிஷி சுனக்கின் ஆட்சியை மக்கள் நிராகரித்துள்ளதையே இந்த தேர்தல் முடிவு காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பொதுத் தேர்தலின்றி பிரிட்டிஷ் ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் ஒரு இடம் காலியானால், அதற்கு புதிய உறுப்பினரைத் தேர்ந்தெடுக்க இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.
கோவிட் காலத்தில் பாராளுமன்றத்திற்கு தவறான தகவல்களை வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட பின்னர், போரிஸ் ஜான்சன் பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.
மேலும் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார். கோகோயின் பயன்படுத்திய குற்றத்தை ஒப்புக்கொண்டு அவரது நெருங்கிய கூட்டாளி ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அதன்படி இவர்கள் மூவருக்கும் புதிய எம்.பி.க்களை தேர்வு செய்ய இன்று இடைத்தேர்தல் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.