இலங்கையின் வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சைகள் நிறுத்தம்!
 
																																		தேசிய வைத்தியசாலையில் இன்று (21) நடைபெறவிருந்த பெருமளவிலான சத்திரசிகிச்சைகள் பிற்போடப்பட்டுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.
அகில இலங்கை தாதியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் .எஸ்.பி.மடிவத்த இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
ப்ரோபோபோல் என்ற மயக்க மருந்தைப் பயன்படுத்துவதை நிறுத்த மருத்துவ வழங்கல் துறையினர் நடவடிக்கைக்கு எடுத்ததுதான் சத்திரசிகிச்சைகள் ஒத்திவைக்கப்படுவதற்கு காரணம் எனவும் அவர் கூறினார்.
எவ்வாறாயினும், ஏனைய மயக்க மருந்துகளைப் பயன்படுத்தி சத்திரசிகிச்சைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லான தெரிவித்துள்ளார்.
(Visited 9 times, 1 visits today)
                                     
        



 
                         
                            
