மணிப்பூர் விவகாரம்: ராகுல் காந்தி கடும் கண்டனம்

இந்தியாவின் – மணிப்பூர் பகுதியில் இரண்டு பழங்குடியின இளம் பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி நடுவீதியில் ஊர்வலமாக இழுத்து செல்வது போன்ற காணொளி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் கடந்த மே மாதம் 4ஆம் திகதி கங்போக்பி மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.
இந்த கொடூர சம்பவத்துக்கு அரசியல் கட்சித்தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில், மணிப்பூர் வன்முறையை உடனே நிறுத்துங்கள் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “பிரதமரே, இது நாட்டுக்கு அவமானம் என்பது அல்ல.மணிப்பூர் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள பெரும் வலியும் அதிர்ச்சியும்தான். இந்த வன்முறையை உடனே நிறுத்துங்கள்.என தெரிவித்துள்ளார்.
(Visited 11 times, 1 visits today)