ஜெர்மனியில் வெளிநாட்டவர்களின் கொடூர செயல்
ஜெர்மனியில் மாணவர்கள் ஒன்று கூடி நடத்திய விழாவில் மாணவர்கள் மீது வெளிநாட்டவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த நிலையில் தாக்குதல் நடத்திய சிலரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கிழக்கு ஜெர்மனியின் நகரமான டொட்லிஸ் என்ற பிரதேசத்தில் ஒரு உயர்தர பாடசாலை கல்வியை நிறைவு செய்த மாணவர்கள் அபிடு என்று சொல்லப்படுகின்ற இந்த கல்வியை முடித்த பின்னர் அவர்கள் ஒரு விழாவை ஏற்பாடு செய்து இருந்தார்கள்.
இந்த விழாவானது அப்பிதேசத்தில் உள்ள டிஸ்கோ என்று சொல்லப்படுகின்ற நடனம் ஆடுகின்ற இடத்தில் நடைப்பெற்றுள்ளது.
இந்நிலையில் வெளிநாட்டை பின்னனியாக கொண்ட பல இளைஞர்கள் குறித்த மாணவர்கள் மீது சாரமாரியான தாக்குதலை மேற்கொண்டதாக தெரியவந்திருக்கின்றது.
குறிப்பாக ஈராக் நாட்டை சேர்ந்தவர்கள், சிரியா நாட்டை சேர்ந்தவர்கள், துருக்கி நாட்டை சேர்ந்தவர்கள் மற்றும் லெபனான் நாட்டை சேர்ந்த இளைஞர்கள் இவ்வகையான தாக்குதலை மேற்கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் சிரியா நாட்டை சேர்ந்த 3 பிரஜைகளை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும், முறையே 19,21, 34 வயதுடைய சிரியா நாட்டை சேர்ந்தவர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்பட்டுள்ளதாக தெரியவந்துள்து.
அண்மை காலங்களில் சிரியா நாட்டை சேர்ந்த அகதிகள் பல அகதிகள் இந்நாட்லே கத்தி குத்து சம்பவங்களில் ஈடுப்பட்டமை குறிப்பிடத்தக்கது.