அலபாமாவில் கடல் ஆமைக்கு CT ஸ்கேன் செய்யப்பட்டது !
அலபாமாவில் ‘கேல்’ என்ற கடல் ஆமைக்கு CT ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது. இந்த படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
அலபாமாவில் உள்ள ஒரு கடல் ஆமைக்கு டிகாடூர் மோர்கன் மருத்துவமனையில் சிடி ஸ்கேன் செய்யப்பட்டது. காலே என்று பெயரிடப்பட்ட இந்த ஆமைதான் மருத்துவமனையில் ஸ்கேன் செய்யப்பட்ட முதல் ஆமையாகும்.
இந்த கடல் ஆமை 2019 இல் ஒரு மீனவரின் மீன்பிடி கொக்கியில் சிக்கியது. இதனால் ஆமையின் ஓட்டில் காயம் ஏற்பட்டது. இதனால் மிகவும் ஆழமான தொற்றுநோய்கு உள்ளாகியது. இந்த நிலையில், குறித்த ஆமையை கடலில் விட முடியாது.
ஆகவே குறித்த ஆமையை கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் டிகாட்டூரில் உள்ள குக் மியூசியம் ஆஃப் நேச்சுரல் சயின்ஸில் வைத்து பராமரிக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
(Visited 7 times, 1 visits today)