பிரித்தானியாவில் முன்னாள் காதலிக்கு அதிர்ச்சி கொடுத்த இந்தியருக்கு நேர்ந்த கதி

பிரித்தானியாவில் முன்னாள் காதலியை தாக்கிய இந்தியருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மிட்லேண்ட்ஸ் பகுதியை சேர்ந்தவர் தைலான் சிங் என்ற 23 வயதான இளைஞனுக்கே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இந்திய வம்சாவளியான அவர் இங்கிலாந்தை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
கடந்த 2021ம் ஆண்டு அந்த பெண்ணை பின் தொடர்ந்து சென்றுள்ளார். பின் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் அந்த பெண்ணை தைலான் சிங் கடுமையாக தாக்கினார்.
இதில் அந்த பெண்ணின் கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது. இது குறித்த வழக்கு வோல்வர்ஹேம்டன் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தைலான் சிங்குக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
(Visited 21 times, 1 visits today)