செய்தி

விஜய் மகன் சஞ்சய்க்கு ஜோடி பிரபல நடிகையின் மகளா?? நடந்தா நல்லாத்தான் இருக்கும்….

நடிகை தேவயானி இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து குடும்பத்தை மீறி திருமணம் செய்து கொண்டார். அதன்பின் படங்களில் குணச்சித்திர ரோலில் நடித்து இரு பெண் குழந்தைகளை பெற்றெடுத்தார் தேவயானி. அவரது மகள் இனியா சமீபத்தில் தான் 12 ஆம் வகுப்பு முடித்து கல்லூரி சேர்ந்துள்ளார்.

இந்நிலையில், இயக்குனர் ராஜகுமாரன் அளித்த பேட்டியொன்றில் தன்னுடைய இரண்டாம் மகள் இனியா விரைவில் சினிமாவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் உடன் தான் இணைந்து நடிக்கவைக்க போவதாகவும் கூறி தன்னுடைய ஆசையை கூறியிருக்கிறார்.

தேவயானி, பார்த்திபன் நடித்த ’நீ வருவாய் என’ படத்தில் முதலில் அஜித், விஜய் இணைந்து நடிக்கவிருந்தது.

ஆனால் விஜய் நடிக்காமல் போக பார்த்திபனுடன் அஜித் நடித்து கொடுத்தார். இந்நிலையில் முதல் பாகத்தில் விஜய் நடிக்கவில்லை என்பதால் ’நீ வருவாய் என’ படத்தின் இரண்டாம் பாகத்திலாவது அவரது மகனை நடிக்கவிட வேண்டும் என்றும் விஜய்யிடம் நேரடியாக கேட்கப்போவதாகவும் கூறியிருக்கிறார் இயக்குனர் ராஜகுமாரன்.

தற்போது ’நீ வருவாய் என’ 2-வின் ஸ்கிரிப் ரெடியாவிட்டதாகவும் 10 பேரிடம் கதையை கூறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் விஜய் மகன் ஒரு கேரக்டரிலும் மற்றொரு கேரக்டரில் இயக்குனர் விக்ரமனின் மகன் கனிஷ்கா விக்ரமன் என்றும் உறுதியாக சொல்லியுள்ளார்.

ஆனால் ஜேசன் சஞ்சய் விசயத்தில் தான் முடிவெடுப்பதில்லை என்றும் அவர் விருப்பம் என்னவோ அதை செய்யட்டும் என்றும் விஜய் பேட்டியில் கூறியிருந்தார். அப்படி விஜய் ஓகே கூறினாலும் ஜேசன் சஞ்சய், தற்போது இயக்குவதில் அதிக கவனம் செலுத்தி வருவதால் நடிக்க எப்படி ஒற்றுக்கொள்வார்.

காலப்போக்கில் அது நடந்தால் ராஜகுமாரனின் ஆசையும் நிறைவேறும் குட்டி தளபதியும் உருவாகுவார் என்று ரசிகர்களும் மகிழ்ச்சி அடைவார்கள்.

(Visited 7 times, 1 visits today)

MP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி