வாசகர்கள் எதிர்பார்க்காத வகையில் நடுப்பக்கத்தில் நிறைவடைந்த உலகின் முதலாவது நாவல்!
உலகின் நீளமான ரயில்வே பாதை ரஷ்யாவில்தான் இருக்கிறதாம்.
உலகின் மிக நீளமான ரயில்வே பாதை ரஷ்யாவில் தான் இருக்கிறது. இந்த ரயில் பாதையானது டிரான்ஸ் – சைபீரியன் பகுதியில் அமைந்திருக்கிறது. இதனை கடக்க ஏழு நாட்கள் எடுக்கும். அதேநேரம் இந்த பாதையை நீங்கள் பயணிக்கும்போது 3901 பாலங்களை கடக்க வேண்டும்.
பூமியில் தங்கம் சொற்ப அளவில் தான் இருக்கிறது
நாம் வாழும் புவியில் சிறிதளவு தங்கம் தான் இருக்கிறதாம். 99 சதவீதம் பூமியின் மையப்பகுதியில் காணப்படுவதாக டிஸ்கவர் இதழ் ஒன்று தெரிவித்துள்ளது.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் கண் இமைகள் நியூயார்க் நகரில் உள்ளன
ஐன்ஸ்டீனின் கண் இமைகள் இன்றும் பாதுகாக்கப்படுகின்றன. ஹென்றி ஆப்ராம்ஸிடம் கொடுக்கப்பட்டு பாதுகாப்புப் பெட்டியில் வைக்கப்பட்டுள்ளன. ஐன்ஸ்டீனின் பிரேத பரிசோதனையை மேற்கொண்ட, தாமஸ் ஹார்வியிடம் இருந்து அவை பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
உலகின் முதல் நாவல் வாக்கியத்தின் நடுப்பகுதியில் முடிகிறது
11 ஆம் நூற்றாண்டில் முரசாகி ஷிகிபு எழுதிய The Tale of Genji, உலகின் முதல் நாவலாகக் கருதப்படுகிறது. 54 நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட அத்தியாயங்களைப் படித்த பிறகு, வாசகர் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் வகையில் நாவல் முடிவடைந்துள்ளது. இந்த நாவலை வாசித்தவர்கள் கதையின் முடிவை நாங்கள் காணவில்லை எனக் குறிப்பிடுகின்றனர்.
எகிப்திய மம்மியின் கண்களில் வெங்காயம் கண்டுப்பிடிக்கப்பட்டது.
பண்டைய எகிப்தின் பார்வோன் ராம்செஸ் IV மம்மி பதப்படுத்தப்பட்டபோது கண்களில் வெங்காயம் வைத்து செய்யப்பட்டிருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அதை வணங்கியதாக கூறப்படுகிறது.