உள்ளாடைக்குள் மறைத்து பாம்புகளை கடத்த முயன்ற பெண்! பிறகு நடந்தது என்ன?

சீனா மற்றும் ஹாங்காங் எல்லையான குவாங்டாங் மாகாணத்தில் உள்ள புக்சியன் துறைமுகத்திற்கு ஹாங்காங் செல்வதற்காக முயன்ற பெண்ணை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டபோது அதிர்ச்சியடைந்தனர்.
சோதனையில், அந்த பெண் தனது உள்ளாடையில் மார்பகங்களுக்கு இடையே வெவ்வேறு துணி பைகளில் கட்டி 5 பாம்பு குட்டிகளை கடத்த முயன்றது தெரியவந்தது.
பின்னர் அந்தப் பெண்ணிடம் இருந்து பாம்புகள் மீட்கப்பட்டன. குறித்த பெண்ணுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வித்தியாசமான முறையில், பெண் ஒருவர் தனது உள்ளாடைக்குள் பாம்புகளை மறைத்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
(Visited 15 times, 1 visits today)