அதிகம் கோபப்படுபவரா நீங்கள்? உங்களுக்கு காத்திருக்கும் ஆபத்து
ஒரு மனிதன் தன்னுடைய வாழ்வில் பல்வேறு உணர்வுகளுடன் பயணிக்கிறான். அதில், அனைவருக்கும் கோபம் ஒரு பொதுவான உணர்வு தான். இது மனித வாழ்க்கையில் சாதாரணமாக ஏற்படுகின்ற உணர்வு.
ஒருவருக்கு கோபம் வரும்போது அதை கட்டுப்படுத்தாமல் அடிக்கடி வெளிப்படுத்துவது நல்லது. இந்த கோபத்தை கட்டுப்படுத்துவதால் அது மனப்பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும். இது குடும்பங்கள் மட்டுமல்லாமல் வேலை பார்க்கும் இடங்களிலும் மன அழுத்தத்திற்கு காரணமாக இருக்கும்.
மேலும் மதுப்பழக்கம், நிதி நெருக்கடி போன்ற பல்வேறு பிரச்சனைகளையும் ஏற்படுத்திவிடும்.
முட்டாள் தனமாக அர்த்தமற்று கோபப்படுபவர்கள் மூர்க்கத்தனமாக நடந்து கொள்வார்கள்.
ஆக்ரோஷமாக கோபம் கொண்டிருப்பவர்கள் அந்த கோபத்திற்கான வலுவான காரணத்தை பெற்றிருப்பார்கள். இவர்கள் தன்னை சுற்றி இருப்பவர்களை காயப்படுத்த அதிகப்படியான வாய்ப்புகள் இருக்கின்றது. இந்த வகை கோபம் பழிவாங்கும் எண்ணத்துடன் இருக்கும்.
இந்த மாதிரியான கோபப்படுவதால் நமது உடலில் பல்வேறு உடல் நலக்குறைவு ஏற்படக்கூடும். இந்த கோபத்தினால் மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைகிறது. மேலும், இதய நோய், மாரடைப்பு உள்ளிட்டவற்றிற்கான முக்கிய காரணமாக கோபம் இருக்கிறது.
இதனால் அவர்களது ஆயுட்காலம் குறையும். அதிகம் கோபப்படாதவர்கள் நீண்ட காலம் உயிர் வாழ்வார்களாம்.
இந்த கோபம் நுரையீரலை பாதிக்க கூடியது. நுரையீரல் பலவீனமடைய கோபம் வழிவகை செய்யும்.
கோபத்தை கையாள முதலில் அதற்கான காரணத்தை கண்டறிய வேண்டும். இதற்கு தீர்வு இருக்குமானால் அதை நோக்கி நகர்வது நல்லது. ஒருவேளை தீர்வு கிடைக்காத ஒரு விஷயமாக இது இருக்குமானால் தேவையில்லாமல் ஆத்திரப்படாமல் மனதை வேறு வழிகளில் செலுத்தி அதை மறக்க முயல்வது தான் சரியான வழி.