ஐரோப்பிய நாட்டிற்கு 200 பேருடன் சென்றுகொண்டிருந்த படகு மாயம்

ஸ்பெயினை நோக்கிச் சென்ற ஒரு படகைக் காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஆப்பிரிக்காவில் இருந்து சென்ற படகே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
ஸ்பெயினின் கெனரி (Canary) தீவுகளை நோக்கிச் சென்ற அந்தப் படகில் குறைந்தது 200 பேர் இருந்ததாக நம்பப்படுகிறது.
ஆப்பிரிக்காவின் செனகல் (Senegal) நாட்டில் இருந்து ஸ்பெயினை நோக்கிக் கடந்த மாதம் 27ஆம் திகதி அந்தப் படகு புறப்பட்டது.
படகில் ஏராளமான சிறுவர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதே போன்ற மேலும் இரண்டு படகுகளையும் காணவில்லை.
கடந்த ஆண்டு அதுபோல் ஆப்பிரிக்காவில் இருந்து ஸ்பெயினுக்குச் சாதாரண மீன்பிடிப் படகுகளில் செல்ல முயன்றவர்களில் சுமார் 560 பேர் உயிரிழந்துள்ளனர்.
முந்திய ஆண்டில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாயினர் என்று உலக நிறுவனம் சொல்கிறது.
(Visited 11 times, 1 visits today)