18 வயதானதும் 20,000 யூரோ பணம் வழங்கும் ஐரோப்பிய நாடு
ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் இளைஞர்களுக்கு பணம் வழங்கும் புதிய திட்டத்தை தொழில் அமைச்சர் பரிந்துரைத்துள்ளார்.
சமூக ஏற்றத்தாழ்வைக் கையாள 18 வயதானவுடன் 20,000 யூரோ பணம் கொடுக்கும் வகையில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளார்.
அந்தப் பணத்தைக் கல்வி, பயிற்சி, வர்த்தகம் தொடங்க அவர்கள் பயன்படுத்தலாம். திட்டத்திற்கு 10 பில்லியன் யூரோ செலவாகும் என்றும் செல்வந்தர்களுக்கு வரி விதித்து அந்தப் பணம் ஈட்டப்படும் என்றும் அமைச்சர் Yolanda Díaz கூறினார்.
ஸ்பெயினைச் சேர்ந்த அனைவருக்கும் அந்தத் தொகை 18 வயது முதல் 23 வயது வரை படிப்படியாக வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். நடைமுறையில் அந்தத் திட்டம் எப்படிச் செயல்படும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
நாட்டில் அதைக் காட்டிலும் முக்கியமான பிரச்சினைகள் பல இருப்பதாக எதிர்க்கட்சிகள் கூறின. ஸ்பெயினில் வரும் 23ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.