வட அமெரிக்கா

தன் 99வது பிறந்த நாளை ஸ்கை டைவிங் செய்து கொண்டாடிய மூதாட்டி!

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் 99 வயதான மூதாட்டி ஒருவர் தனது பிறந்தநாளை வித்தியாசமான முறையில் கொண்டாடும் நோக்கில் விமானத்திலிருந்து குதித்துள்ளார்.

பல்வேறு வீரதீர செயல்களில் ஈடுபடும் விருப்பத்தை கொண்ட லக்கி கோயிங் வயோதிபப் பெண் ஸ்கை டைவிங் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றார் .அந்த வகையில் தனது 99வது பிறந்த நாளை முன்னிட்டு பூமியிலிருந்து பத்தாயிரம் அடி உயரத்தில் பறந்த விமானத்தில் இருந்து குதித்து ஸ்கை டைவிங் செய்துள்ளார்.

இந்த அனுபவம் அலாதியானது எனவும் இது மறக்க முடியாத ஒன்று எனவும் அவர் தெரிவிக்கின்றார்.இதற்கு முன்னர் ஒரு தடவை ஸ்கை டைவிங் செய்துள்ள குறித்த பெண் இரண்டாவது தடவையாக இவ்வாறு ஸ்கை டைவிங் செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளார்.

பத்தாயிரம் அடி உயரத்தில் இருந்து கீழே குதித்த குறித்த மூதாட்டியும் அவரது கொள்ளு பேரனும் எவ்வித பாதிப்புகளும் இன்றி பாதுகாப்பாக தரையிறங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கையில் எது எல்லாம் சந்தோஷத்தை தருகின்றதோ அதனை திருத்தியுடன் செய்யுமாறு குறித்த மூதாட்டி ஏனையவர்களுக்கு அறிவுரை வழங்குகின்றார்.தனது நூறாவது பிறந்தநாளில் என்ன மாதிரியான கொண்டாட்டம் செய்ய வேண்டும் என்பது பற்றி இன்னும் தீர்மானிக்கவில்லை என கோயிங் தெரிவித்துள்ளார்

(Visited 13 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்

You cannot copy content of this page

Skip to content