ஜெர்மனியில் பயண அட்டை இன்றி பயணிக்க அனுமதி! வெளியான அறிவிப்பு
ஜெர்மனியில் வயன் மாகாணத்தில் உள்ள ஒரு நகரத்தில் பொதுமக்கள் பயண அட்டை இன்றி பொது போக்குவரத்துக்களில் பயணம் செய்ய முடியும் என அந்நகர முதல்வர் அறிவித்து இருக்கின்றார்.
ஜெர்மனியில் கடந்த மாதங்களில் பயண அட்டைகள் தொடர்பில் பல சலுகைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
பொது மக்கள் 49 யுரோ பயண அட்டை யை பெற்று அதனை தற்பொழுது பாவணைப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் வயன் மாநிலத்தில் உள்ள ஏலாங்கன் நகரத்தில் உள்ள நகர சபையானது அந்த பிரதேசத்தில் உள்ள பயணங்களுக்கு சில சலுகைகளை செய்ய தீர்மானித்துள்ளதாக தெரியவந்திருக்கின்றது.
அதாவது ஏயர் லங்கன் நகரத்தினுள் பயணம் செய்கின்றவர்கள் பஸ்களில் பயணம் மேற்கொள்வதற்குரிய பயண அட்டைகளை 2024 ஆம் ஆண்டில் இருந்து நடைமுறைக்கு வர மாட்டாது என கூறியிருக்கின்றார்.
அதாவது 2024 ஆம் ஆண்டில் இருந்து உள் ஊரில் அதாவது சிடி சென்டர் என்று சொல்லலப்படுகின்ற நகர மத்தியில் பயணம் செய்கின்றவர்கள் பயணம் அட்டை இல்லாமலே பஸ்களில் பயணம் மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.