இலங்கை வரும் நாசா குழுவினர்!
நாசாவின் விஞ்ஞானிகள் குழுவொன்று இவ்வாரத்தில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க் கிரகத்தில் உள்ள கற்களுக்கும் இலங்கையில் காணப்படும் கற்களுக்கும் இடையில் உள்ள ஒற்றுமைகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்காகவே இந்த குழு இலங்கை வரவுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்த கருத்து வெளியிட்டுள்ள நாசாவின் மூத்த விஞ்ஞானிகளில் ஒருவரான இலங்கையைச் சேர்ந்த கருணாதிலக்க, இலங்கையின் புவியியல் அம்சங்கள் செவ்வாய் கிரகத்தில் உள்ள சில பாறைகள் மற்றும் மண்ணுடன் குறிப்பிடத்தக்க ஒற்றுமையைக் கொண்டுள்ளது எனக் கூறினார்.
இது தொடர்பிலான ஆய்வுகளை மேற்கொள்வதற்கே நாசா குழுவினர் இலங்கை வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 32 times, 1 visits today)





