வட அமெரிக்கா

அமெரிக்காவில் காதலனின் வெறிச்செயல்… 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி!

அமெரிக்காவி 17 வயதான இளைஞனால் 15 வயது காதலி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கொல ராடா மாகாணம் கிரிலே புறநகர் பகுதியான தென் வேர் என்ற இடத்தில் வசித்து வந்தவர் லில்லி சில்லா (15)இவருக்கும் ஜோவனி சிரியோ (17) என்பவருக்கும் காதல் மலர்ந்தது.இருவரும் கடந்த 6 மாதங்களாக தீவிரமாக காதலித்து வந்த நிலையில் லில்லி சில்வா தனது காதலை திடீரென முறித்தார் இதனால் ஆத்திரம் அடைந்த ஜோவனிசிரியோ பல முறை காதலியை சந்தித்து பேச முயன்றார். எனினும் லில்லி சில்வா அவருடன் பேச மறுத்து விட்டார்.

இது அவருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. சம்பவத்தன்று ஜோவனி சிரியோ காதலி வீட்டுக்கு சென்றார். மோட்டார் சைக்கிளை வெளியில் நிறுத்தி விட்டு வீட்டுக்குள் சென்றார். அங்கு படுக்கை அறையில் இருந்த லில்லி சில்வாவை நோக்கி தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ஆத்திரம் தீர சரமாரியாக சுட்டுள்ளார்.

அமெரிக்காவில் காதலன் வெறிச்செயலால் 15 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம் | 15 Year Old Girl Due To Lover S Madness In America

அந்த சமயம் பக்கத்து அறையில் லில்லியின் 13 வயதான தம்பி TV பார்த்துக்கொண்டு இருந்தான். துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு அவன் அங்கு ஓடி வந்தான். அங்கு தனது அக்கா சுடப்படுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளான்.

உடலில் பல இடங்களில் குண்டு பாய்ந்த லில்லி சில்வா ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து உயிரிழந்த நிலையில், ஜோவனி சிரியோ காதலியின் தம்பியிடம் இருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி விட்டார். இதனால் அந்த சிறுவனால் யாரையும் தொடர்பு கொள்ள முடியாமால் போய்விட்டது.

தகவலறிந்து பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். சம்பவம் தொடர்பாக ஜோவனி சிரியோவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.அதேவேளை சுட்டுக்கொல்லப்பட்ட லில்லி சில்வா சில தினங்களின் முன்பே தனது 15வது பிறந்த நாளை கொண்டாடியதாக கூறப்படுகின்றது.

(Visited 20 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!