பாத வெடிப்பா?… வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எப்படி சரிசெய்யலாம்..!
சிலருக்கு பாதங்களில் வெடிப்பு ஏற்படும். அதனை பித்தவெடிப்பு என கூறுவோம். சில வேளைகளில் இந்த பாதவெடிப்பு வலியை தரும். தற்போது குளிர்காலத்தில் அதிக அளவு பாத வெடிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. அதனை வீட்டிலேயே எப்படி செய்யலாம் என பார்போம்.
ஆப்பிள் சாறு வினிகர் :
முதலில் வெதுவெதுப்பான நீரில் சில துளிகள் ஆப்பிள் சாறு வினிகரை சேர்த்து நன்றாக கலந்து கால்களை அந்த நீரில் வைக்க வேண்டும். பின்னர் 15 நிமிடங்கள் கழித்து சுத்தம் செய்து வர உங்கள் பாதங்கள் மென்மையாகும்.
தேயிலை எண்ணெய் :
ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெயை மற்றும் 7 துளிகள் தேயிலை எண்ணெயை கலந்து பாதவெடிப்பில் மசாஜ் செய்து 15 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். தேயிலை எண்ணெய் பாத வெடிப்பை சரிசெய்யும் ஆற்றல் உடையது.
மருதாணி:
மருதாணியை அரைத்து பித்த வெடிப்புள்ள இடங்களில் தடவி வர பாத வெடிப்பு சரியாகும்.
மஞ்சள்:
மஞ்சள் தூள் சரும பிரச்சனைகளையும் தோல் பிரச்சனைளையும் சரிசெய்யும் ஆற்றல் கொண்டது. மஞ்சள் தூளை தண்ணீருடன் அல்லது தயிருடன் கலந்து பாத வெடிப்பில் தடவி வர பாதவெடிப்பு சரியாகும்.