பெண்கள் தலையில் பூ வைப்பதால் ஏற்படும் நன்மைகள்!
பெண்கள் தலையில் சூடும் பூ என்பது அழகிற்காக வாசனைக்காக மட்டுமே வைக்கப்படுவது என்று இல்லாமல் அவற்றில் இருக்கக்கூடிய சில ஐதீக நன்மைகளுக்காகவே பெண்களுக்கு பூ வைக்க சாஸ்திரங்களும் சம்பிரதாயங்களும் வலியுறுத்துகின்றன.
பெண்களுடைய மன அழுத்தத்தை குறைக்கக்கூடிய தன்மை பூவிடம் இருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. உச்சி வகுந்தெடுத்து தலைவாரி சிகப்பு நிற பொட்டு வைத்து பூ சூடிக்கொள்ளும் பெண்கள் மனமகிழ்ச்சியுடன் இருப்பதாகவும் அவர்களுக்கு மன அழுத்தம் குறைவாக இருப்பதாகவும் சாஸ்திரங்கள் தெரிவிக்கிறது.
பெண்கள் தலையில் பூ சூடுவதால் பல்வேறு விதமான நன்மைகள் அவர்களுக்கு ஏற்படுவதாக அறிவியலும் தெரிவிக்கிறது. தலையில் பூ சூடும் பெண்கள் விடாப்பிடியான மனநிலையில் இருந்து மனம் மாறுவதற்கான காரணிகளும் பூக்களில் இருப்பதாக அறிவியல் உண்மை கண்டறியப்பட்டு இருக்கிறது.
மேலும் பெண்கள் தலையில் பூ சூடுவதால் அவர்களது பிராண வாயு அதிகரித்து அதன் காரணமாக மனமுருகி மன அழுத்தம் போன்ற பிரச்சினைகளிலிருந்து விடுபட முக்கிய காரணமாக இருப்பதாக தெரிய வருகிறது.
ஒரு விஷயத்தை பல கோணங்களில் சிந்திக்கும் ஆற்றலை பூக்களிலிருந்து வரும் வாசனை கொடுக்கிறது. மல்லி, ஜாதி முல்லை போன்ற பூக்களை தினமும் சூடிக்கொண்டாள் தெளிவான முடிவு எடுக்கும் திறன் அதிகரிக்குமாம்.
தலை நிறைய பூ சூடிக்கொண்டிருந்தால் மனம் ஒருமுகப்பட்டு இறை சிந்தனை அதிகரிக்குமாம். இதன் காரணமாக மனமகிழ்ச்சி ஏற்படுவதாக சம்பிரதாயங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாகவே புதிதாக திருமணமான பெண்கள் தலை நிறைய பூசூடி மனமகிழ்ச்சியுடன் இருப்பதாகவும் சம்பிரதாயங்களில் குறிப்புகள் இருக்கின்றன.