ஜெர்மனியில் அடிப்படை ஊதியத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை
ஜெர்மனி நாட்டில் அடிப்படை ஊதியம் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதனை பொருளியல் வல்லுனர்களும் ஆதரித்துள்ளார்கள்.
ஜெர்மனியில் தற்பொழுது மிண்டஸ் குலோன் என்று சொல்லப்படுகின்ற அடிப்படை சம்பளமானது 12 யுரோவாக காணப்படுகின்றது.
இதேவேளையில் இந்த அடிப்படை சம்பளத்தை உயர்த்துவதா? இல்லையா? என்பது பற்றி ஓர் அமைப்பானது ஆராய்ந்து வருக்கின்றது.
அதாவது அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கும் அமைப்பானது இந்த விடயம் தொடர்பில் முடிவெடுக்கவுள்ள நிலையில் ஜெர்மனியின் இடது சாரிகட்சி என்று சொல்லப்படுகின்ற லிங்ஸ் கட்சியுடைய முக்கிய அரசியல்வாதியான பீட் பாட் பாஷ் அவர்கள் மீண்டும் தமது கோரிக்கையை விடுத்துள்ளார்.
மிண்டஸ் குலோன் என்று சொல்லப்படுகின்ற அடிப்படை சம்பளமானது 12 யுரோவில் இருந்து 14 யுரோவாக உயர்த்தப்பட வேண்டும் என்றும்
இவ்வாறு இந்த 14 யுரோவாக உயர்த்தப்பட்டால் மக்கள் பொருட்களை கொள்வனவு செய்ய கூடிய தன்மை அதிகரிக்கப்படும்.
இந்த விடயமானது பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் கூறியிருக்கின்றார்.
இவரது கருத்தை பல பொருளாதார நிபுணர்களும் கடைப்பிடிக்கின்றார்கள் என்றும் இவர்களும் அடிப்படை சம்பளத்தை 14 யுரோவாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.