இலங்கை

யாழில் வாடகை சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கான முக்கிய அறிவிப்பு!

யாழ்ப்பாண மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வாடகை சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் கட்டண மீட்டர் பொருத்துதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இன்றையதினம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் அரச அதிபர் முச்சக்கர வண்டி சங்கத்தினர், மற்றும் மாநகர சபை ஆணையாளர் ஆகியோருக்கு இடையில இடம்பெற்ற கலந்துரையாடலின் போது குறித்த விடயம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள் யாழ் மாவட்ட முச்சக்கர வண்டிகள் சங்கத்தில் பதிவினை மேற்கொண்டு எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னதாக கட்டண மீட்டர்களை பொருத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து எதிர்வரும் 16ஆம் 17 ஆம் மற்றும் 18 ஆம் திகதிகள் ஆகிய மூன்று நாட்களிலும் கட்டண மீட்டர்கள் பொருத்தப்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கு பொலீசாரினால் ஸ்டிக்கர்கள் ஒட்டப்படும்.

எனவே யாழ் மாவட்ட முச்சக்கர வண்டிகள் சங்கத்தில் பதிவினை மேற்கொண்டு கட்டண மீட்டர்களை பொருத்தி, பொலீசாரின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டே சேவையில் ஈடுபட முடியும்.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திதியில் இருந்து குறித்த நடவடிக்கைகளை பின்பற்றாத முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபட முடியாது.

முச்சக்கர வண்டிகளை வாடகைக்கு அமர்த்துவோர் பாதிப்பிற்குள்ளாகாது பணத்தினை செலுத்துவதற்கும் முச்சக்கர வண்டி சாரதிகள் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான கட்டணத்தினை அறவீடு செய்வதைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

(Visited 23 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்