சர்ச்சைகளுக்கு மத்தியில் 2வது முறையாக பிரதமர் ஆனார் மிட்சோடாகிஸ்
பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் தலைமையிலான கிரீஸ் அரசாங்கம், தொலைபேசி ஒட்டுக்கேட்கும் ஊழல்கள் மற்றும் பெப்ரவரியில் ஒரு பெரிய ரயில் விபத்து காரணமாக பெரும் விமர்சனத்துக்குள்ளானது.
இதையடுத்து பிரதமரின் செல்வாக்கை அறிந்து கொள்வதற்காக ஒரு கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
அவரது அரசாங்கம் மீது மக்கள் அதிருப்தியில் இருப்பது தெரியவந்தது. அப்போது பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார்.
இதனையடுத்து கடந்த மே 21ம் தேதி தேர்தல் நடைபெற்றது.அதில், பிரதமர் மிட்சோடாகிஸ் தலைமையிலான புதிய ஜனநாயகக் கட்சி 158 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.
மிட்சோடாகிஸ் இரண்டாவது முறையாக பிரதமரானார்.
பிரதான எதிர்க்கட்சி கூட்டணியான சிரிசா 48 இடங்களில் வெற்றி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
(Visited 6 times, 1 visits today)