இலங்கையில் கண்டுப்பிடிக்கப்பட்ட புதிய உயிரினங்கள்
அம்பாறை – அத்தகல காப்புக்காடு மற்றும் குருநாகல் – கல்கிரிய வனப் பகுதியில் இரண்டு புதிய கெக்கோ இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
அத்தகல காப்புக்காட்டில் காணப்படும் இனத்திற்கு ஜயவீர என்றும், கல்கிரிய சரணாலயத்தில் காணப்படும் இனத்திற்கு நாணயக்கார என்றும் பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த இனமானது சூழலியலாளர்களான சாந்தசிறி ஜயவீர மற்றும் ஆனந்த லால் நாணயக்கார ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த கெக்கோக்கள் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன மற்றும் அவற்றின் தொகை குறைவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 16 times, 1 visits today)




