வட அமெரிக்கா

மார்க் ஜூக்கர்பெர்க்கை சண்டைக்கு அழைத்த எலான் மஸ்க்..

மார்க் ஜூக்கர்பெர்க் தலைமையில் இயங்கி வரும் பேஸ்புக் மற்றும் எலான் மஸ்க் தலைமையில் இயங்கி வரும் நிறுவனமான ட்விட்டர் ஆகியவை அமெரிக்காவில் இயங்கி வருகிறது.

சமீபத்தில் ட்விட்டருக்கு போட்டியாக பேஸ்புக் நிறுவனம் ஒன்றை தொடங்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தது. வளர்ச்சி நிலையில் இருக்கும் இந்த முயற்சி “பி92″ என பெயரிடப்பட்டிருப்பதாக தெரிகிறது.

இம்முயற்சியை மஸ்க் ரசிக்கவில்லை. பேஸ்புக் நிறுவனருக்கு எதிராக பல கிண்டலான கருத்துக்களை பதிவு செய்து வருகிறார். இதை உற்றுக் கவனித்து வந்த ட்விட்டர் ஆதரவாளர் ஒருவர், ”ஜூக்கர்பெர்க், ஜூ ஜிட்சூ எனப்படும் தற்காப்புக்கலை அறிந்தவர். சமீபத்தில் ஒரு போட்டியில் வென்றவர்” எனவே கவனமாக இருக்க வேண்டும் என்று மஸ்க்கை எச்சரித்தார்.

இதை ஒரு வேடிக்கையாக எடுத்துக் கொண்ட எலான் மஸ்க் ”நேருக்கு நேர் ஒரு கூண்டுச் சண்டையை விரும்புவதாகவும், அதற்கு அவர் தயாரா?” என மார்க் ஜூக்கர்பெர்க்கிற்கு அழைப்பும் விடுத்திருக்கிறார். இதற்கு பதிலளித்த மார்க் ஜூக்கர்பெர்க், “இடத்தை தெரிவிக்கவும்” என எதிர்கோரிக்கை விடுத்திருக்கிறார். இவர்கள் இருவருக்கிடையேயான இந்த உரையாடல்கள், சமூக வலைத்தளங்களில் பயனாளிகளின் பல சுவாரஸ்யமான கருத்துக்களுக்கு வழி வகுத்திருக்கிறது.

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!