மாலத்தீவு ஆளும் கட்சியில் இருந்து முன்னாள் அதிபர் நஷீத் விலகல்
மாலத்தீவு நாடாளுமன்றத்தின் சபாநாயகரும் முன்னாள் ஜனாதிபதியுமான முகமது நஷீத் ஆளும் மாலத்தீவு ஜனநாயகக் கட்சியில் இருந்து விலகியுள்ளார்.
மொஹமட் நஷீட், ‘இந்த நாட்டில் தற்போது நிலவும் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு, நான் இந்தக் கட்சியில் நீடிப்பது சிறந்தது என்று நான் நினைக்கவில்லை.என சுட்டிக்காட்டியுள்ளார்.

56 வயதான முகமது நஷீத் மாலத்தீவு ஜனநாயகக் கட்சியின் நிறுவனர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆளும் கட்சியில் இருந்து விலகியிருந்தாலும் சபாநாயகர் பதவியில் நீடிப்பதாக அறிவித்துள்ளார்.





