ரஞ்சன் ராமநாயக்கவை கைது செய்யுமாறு உத்தரவு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு கண்டி நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
வழக்கு விசாரணை ஒன்றுக்காக இன்று நீதிமன்றத்தில் ஆஜராகாததன் காரணமாக அவரை கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
பெண் ஒருவரால தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் காரணமாகவே ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றில் ஆஜராகவில்லை.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து ஒரு மில்லியன் ரூபாவை பெற்ற குற்றச்சாட்டின் கீழ் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு செப்டம்பர் 6ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
(Visited 11 times, 1 visits today)