ஜூன் 29 இல் புனித ஹஜ் பெருநாள்! கொழும்பு பெரிய பள்ளிவாசல்

நாட்டில் துல் ஹஜ் மாதத்துக்கான தலைப்பிறை தென்பட்டதையடுத்து புனித ஹஜ் பெருநாளை எதிர்வரும் 29 ஆம் திகதி கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
புனித துல்ஹஜ் மாதத்துக்கான தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று மஃரிப் தொழுகையின் பின்னர் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் பிறைக்குழுவின் உறுப்பினர்கள், அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா சபை உறுப்பினர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
(Visited 19 times, 1 visits today)