அரசாங்கத்தை வீழ்த்தும் இரண்டாவது சூழ்ச்சியின் அத்தியாயம் ஆரம்பித்துள்ளது – நாமல்!
கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தை வீழ்த்தும் இரண்டாவது சூழ்ச்சியின் அத்தியாயம் ஆரம்பித்துள்ளதாக பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
வலப்பனை பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “சர்வதேச நாணய நிதியத்தின் கலந்துரையாடல்களை சாதகமாக்குவதே அரசாங்கத்தின் ஒரே எதிர்பார்ப்பாகவும், முயற்சியாகவும் இருந்தது.
இருப்பினும் சில பொருளாதார நெருக்கடிகள் தற்போது காணப்படுகின்றன. ஆனாலும் நெருக்கடிகளுக்கு மத்தியில் எமது நாட்டிலுள்ள தொழிற்சாலைகள் மூடப்படும் நிலைக்கு செல்லுமாகவிருந்தால் கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தை வீழ்த்தும் இரண்டாவது சூழ்ச்சியின் அத்தியாயம் ஆரம்பித்துள்ளதாகவே அர்த்தப்படுகிறது.
மக்களை கவனிக்குமாறு அரசாங்கத்திடம் கூறுகிறோம். தொழில்கள் இல்லாமல் செய்ய வேண்டாம். பல துறைகளில் உற்பத்தி பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது.
கிராமங்களின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. அதற்கு காரணம் என்னவெனில் கிராமத்தின் உற்பத்தி பொருளாதாரம் எமது நாட்டில் நடைமுறைப்படுத்தப்படவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.