எந்த திசையில் உறங்கினால் என்ன நன்மைகள் கிடைக்கும்…?
தூக்கம் என்பது ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமான ஒன்றாகும். இப்படி இருக்கையில் மெத்தையை போட்டு உறங்கும் திசைகளை வைத்து கிடைக்கும் நன்மைகள் என்னவென பார்போம்.
கிழக்கு திசை :
உங்களின் மெத்தையை கிழக்கு திசையில் தலைவைத்து தூங்கும் போது படைப்பாற்றல் வளர்ச்சி அடையும். குழந்தைகள் அந்த திசையில் வைத்து தூங்கும் போது குழந்தை எதிர்காலத்துக்கு நன்மை அளிக்கும்.
மேற்கு திசை :
மேற்கு திசையில் படுத்தால் சோர்வு மற்றும் உற்சாகமின்மையை கொடுக்கும் இதனால், எனவே மேற்கு திசையில் படுப்பதை தவிர்க்கவும்.
தென் கிழக்கு திசை :
இந்த திசையில் தூங்குவதன் மூலம் சுறுசுறுப்பாக இருக்க உதவும். மேலும், படைப்பாற்றல் திறன் வளரும்.
தென் மேற்கு திசை :
நிம்மதியான தூக்கம் வேண்டும் என நினைப்பவர்கள் தென் மேற்கு திசையில் உறங்குவது சிறந்தது. நல்ல ஆழ்ந்த தூக்கம் மற்றும் மனம் அமைதி பெறும்.
வடக்கு திசை :
தூங்குவதில் பிரச்சனை இருந்தால் இந்த திசையில் உறங்குவது தூங்க உதவும். மேலும், வயதானவர்கள் இந்த திசையில் தூங்கினால் நிம்மதியான உறக்கம் கிடைக்கும்.
தெற்கு திசை :
தெற்கு திசையில் உறங்குவதை தவிர்க்க வேண்டும். இந்த திசையில் உறங்குவது அவ்வளவாக நன்மை தராது.