ஆசிய உள்கட்டமைப்பு முதலீடு வங்கியோடு தொடர்புகளை துண்டித்த கனடா
சீனாவைச் சேர்ந்த AIIB எனப்படும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீடு வங்கியோடு தொடர்புகளைத் துண்டிப்பதாக கனடா அரசு அறிவித்துள்ளது.
அந்த வங்கி சீன கம்யூனிஸ்ட் கட்சியினால் கட்டுப்படுத்தப்படுவதாக வந்த புகார்களையடுத்து கனடா இந்த அறிவிப்பை வெளியிட்டது.
ஜெர்மனி இங்கிலாந்து பிரான்ஸ் ஆகிய ஜி7 உறுப்பு நாடுகளை அந்த வங்கி தனது வாடிக்கையாளர்களாக கொண்டுள்ளது.
அதன்படி AIIB வங்கியின் சர்வதேச தகவல் தொடர்பு பிரிவு தலைவர் பொறுப்பிலிருந்து விலகிய கனடா குடிமகன் பாப் பிக்கர்ட் சீன வங்கி கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அறிவித்தார்.ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று வங்கியின் சார்பில் மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 10 times, 1 visits today)





