சத்திரசிகிச்சையின்பின் வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார் பாப்பரசர்

பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ், குடலிறக்க சத்திரசிகிச்சையின் பின்னர் இன்று வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளார்.
86 வயதான பாப்பரசர் பிரான்சிஸுக்கு குடலிறக்க நோய் காரணமாக, ரோம் நகரிலுள்ள ஜெமேலி வைத்தியசாலையில் கடந்த 7 ஆம் திகதி திகதி சத்திரசிகிச்சை செய்யப்பட்டது. 3 மணித்தியாலங்கள் இச்சத்திரசிகிச்சை நீடித்தது.
இந்நிலையில், இன்று வெள்ளிக்கிழமை காலை அவர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார். வைத்தியசாலைக்கு வெளியே திரண்டிருந்த மக்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
முன்னதாக, நேற்று, வைத்தியசாலையில் சக்கரநாற்காலி மூலம் நடமாடிய பாப்பரசர் தனக்கு சிகிச்சையளித்து, பராமரித்த மருத்துவர்கள், தாதியர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
2021 ஆம் ஆண்டின் பின்னர், பாப்பரசர் பிரான்சிஸ் வைத்தியசாலையில் தங்கியிருந்தமை இது 3 ஆவது தடவையாகும்.
(Visited 24 times, 1 visits today)