ஜெர்மனி பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்
ஜெர்மனியின் நோற்றின்பிஸ்பாலின் மாநிலத்தில் மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் பயண அட்டை ஒகஸ்ட் மாதத்தில் இருந்து வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனிய நாட்டில் போக்குவரத்து தொடர்பில் மக்களுக்கு பல சலுகைகள் வழங்கப்படு வருகின்றது.
தற்பொழுது வழங்கப்பட்டு வந்த 49 யுரோ பயண அட்டையால் ஜெர்மனியர்கள் பயன அடைந்து வருகின்றது.
இந்நிலையில் நோற்றின்பிஸ்பாலின் மாநிலத்தில் வாழுகின்ற பாடசாலை மாணவர்கள் ஷோ கோ டிக்கட் என்று சொல்லப்படுகின்ற ஒரு பயண அட்டையை வைத்து இருந்தால் அவர்கள் வருகின்ற ஆவணி மாதத்திற்கு பின் இந்த பயண அட்டையை 29 யுரோக்களுக்கு கொள்வனவு செய்ய முடியும் என்று தெரியவந்திருக்கின்றது.
இதுவரை காலமும் இந்த ஷோ கோ டிக்கட் என்று சொல்லப்படுகின்ற பயண அட்டைக்கு 39 யுரோ 40 சென்ட்களை வழங்கி வந்தது. இதன் அடிப்படையில் ஒகஸ்ட் மாதம் இதன் விலையானது குறைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
வழமையில் ஒரு ஷோ கோ டிக்கட்டை கொள்வனவு செய்வதாக இருந்தால் பாடசாலைக்கும் குறித்த மாணவர் வசிக்கின்ற வீட்டுக்கு இடையில் 3.5 கிலோ மீற்றர் தூரம் இருத்தல் வேண்டும்.
இவ்வாறு 3.5 கிலோ மீற்றர் தூரம் இல்லாதவர்கள் கூட எதிர்வரும் காலங்களில் இந்த ஷோ கோ டிக்கட்டை 29 யுரோவிற்கு வாங்க கூடிய சூழ்நிலை உள்ளதாக இந்த மாநில போக்குவரத்து அமைச்சர் ஒலிவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.