வாழ்வியல்

சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து சருமத்தை பாதுகாக்க இலகு வழி!

கோடைகாலத்தில் சரும பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் பேஸ் மாஸ்க்குகள்.

கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நாம் நமது தேவைக்காக வெளியில் செல்ல வேண்டிய சூழல் ஏற்படலாம். அதிகப்படியான வெயிலின் தாக்கம் நமது உடலில் பல்வேறு வகையான பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும். வெயிலின் தாக்கத்தில் இருந்து நம்மை காத்து சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய சில பேஸ் மாஸ்க்குகள் பற்றி பார்ப்போம்.

How Does Sun Exposure Affect Skin? - Dallas, Texas

தக்காளி மாஸ்க்

தக்காளியில் நமது சருமத்தை பளபளவென மாற்றாக கூடிய தன்மை உள்ளது. தக்காளி கடுமையான சூரியக் கதிர்களின் தாக்கத்திற்கு பின், சருமத்தை ஆற்றவும், ஊட்டமளிக்கவும் உதவுகிறது. முதலில் முகத்தில் ஈரமான டவலை வைத்து பின்னர் தக்காளி கூழ் தடவவும். 15 முதல் 20 நிமிடங்கள் கழித்து நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு கழுவினால் நமது சரும ஆரோக்கியம் மேம்படும்.

Lemon and Honey Water: 10 Benefits of the Magic Potion | Healthmug

எலுமிச்சை சாறு மற்றும் தேன்

எலுமிச்சை மற்றும் தேன் பயன்படுத்தி ஒரு மாஸ்க் செய்யலாம். எலுமிச்சை சாறு ஒரு இயற்கையான ப்ளீச்சராக செயல்படுகிறது மற்றும் உடலில் இருந்து இறந்த செல்களை நீக்குகிறது. தேன் சேர்ப்பது நமது சருமத்திற்கு பொலிவை தரும். அந்த வகையில், எலுமிச்சை சாறு மற்றும் தென் கலந்து முகத்தில் தடவி, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

ஓட்ஸ் சருமத்தை பிரகாசமாக்கும் தன்மை கொண்டது. அதே வேளையில் மோர் ஒரு இனிமையான உணர்வைத் தருகிறது. ஓட்ஸை மோரில் 5-10 நிமிடங்கள் ஊறவைத்து, அந்த பேஸ்ட்டை உங்கள் முகத்திலோ அல்லது வேறு ஏதேனும் தோல் சம்பந்தமான பிரச்சனை உள்ள உடல் பாகத்திலோ தடவ வேண்டும். அதைக் கழுவுவதற்கு முன் அந்தப் பகுதியைத் துடைக்க வேண்டும். பின் அதனை நீரில் கழுவ வேண்டும்.

(Visited 10 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

woman exercising
வாழ்வியல்

ஸ்கிப்பிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

ஸ்கிப்பிங் செய்வதால் பாரிய அளவு நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றது. ஸ்கிப்பிங் என்பது ஆரோக்கியமான உடற்பயிற்சி போன்றது. இது நீங்கள் தொடர்ந்து சுவாசிக்க உதவுகிறது மற்றும் இதயத்தை பலப்படுத்துகிறது.
vegetable and meat
வாழ்வியல்

ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறதா : இந்த உணவுகளை எடுத்துகொள்ளுங்கள்!

ஒருவருக்கு ஹீமோகுளோபின் தேவையான அளவிற்கு இருப்பதை விட குறைவாக இருந்தால் அவர் எப்போதும் சோர்வாக காணப்படுவார். இதைத் தவிர உடல் வலிமையின்மைஇ சருமம் மஞ்சள் நிறமாதல்,  அசாதாரமான