யுனெஸ்கோ அமைப்பில் மீண்டும் இணையும் அமெரிக்கா!
யுனெஸ்கோ அமைப்பில் மீண்டும் இணைய விரும்புவதாக அமெரிக்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துவரும் நிலையில் அமெரிக்கா மீண்டும் இணைய விரும்புவதாக தெரிவித்துள்ளது.
யுனெஸ்கோ அமைப்பின் நிரந்தர உறுப்பினராக அமெரிக்கா இருந்து செயற்பட்டு வந்த நிலையில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆட்சியின் போது குறித்த அமைப்பிலிருந்து விலகியுள்ளது.
இந்நிலையில், யுனெஸ்கோ அமைப்பில் சீனாவின் ஆதிக்கம் மேலோங்கியது. இதற்கிடையே சீனாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையில் இருக்கும் மறைமுகப்போட்டித் தன்மையும் அமெரிக்க மீண்டும் இணைவதற்கு வழிவகுத்துள்ளதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கல்வி, பண்பாடு, அறிவியல் மற்றும் தொடர்பு துறைகளை ஊக்குவிக்கும் வகையில் யுனெஸ்கோ அமைப்பு செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(Visited 13 times, 1 visits today)