ஜம்மு – காஷ்மீர் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் பிராந்தியத்தில் இன்று 5.4 ரிக்டர் அளவிலான பூகம்பம் ஏற்பட்டுள்ளது.
காத்ரா நகரிலிருந்து 84 கிலோமீற்றர் தூரத்தில் இப்பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக இந்தியாவின் தேசிய புவியதிர்வு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இன்று பிற்பகல் 1.33 மணியளவில் தரைமட்டத்திலிருந்து 6 கிலோமீற்றர் ஆழத்தில் இப்பூகம்பம் ஏற்பட்டுள்ளது.
இப்பூகம்பத்தின் அதிர்வு டெல்லியிலும் உணரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளைஇ சீனாவின் ஹீஸாங் பிராந்தியத்திலும் இன்று 5.4 ரிக்டர் அளவிலான பூகம்பமொன்று ஏற்பட்டுள்ளது.





