இந்தியா

கேரளாவில் தெருநாய் கடித்ததால் பலியான 11 வயது சிறுவன்

கேரளாவில் தெருநாய் தாக்குதலில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா, கண்ணூர் முழப்பிலங்காட்லைச் சேர்ந்தவர் நௌஷாத். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகன் நிஹால் (11). இவர் மாற்றுதிறனாளி. இந்நிலையில், நேற்று மாலை வீட்டு வாசலில் நிஹால் விளையாடிக்கொண்டிருந்தான்.

அப்போது, வெகுநேரம் ஆகியும் நிஹால் வீட்டிற்கு வராததால் குடும்பத்தினர் வெளியே வந்து பார்த்தனர். ஆனால், நிஹால் வீட்டு வாசலில் இல்லை. இதனையடுத்து, நிஹாலை உறவினர்கள் தேட ஆரம்பித்தனர்.இரவு 8.30 மணிக்கு வீட்டிலிருந்து 500 மீட்டர் தொலைவில் தெருநாய்களால் குதறப்பட்டு, உடலில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் நிஹால் மூச்சற்ற நிலையில், மயங்கி கிடந்தான்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக நிஹாலை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். ஆனால், தெருநாய்கள் தாக்குதலில் நிஹால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.தெருநாய் தாக்குதலுக்கு 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை கேரளாவில் கடந்த ஆண்டு மட்டும் 2 லட்சம் நாய் கடி வழக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆளும் கட்சியை இச்சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டி வருகின்றன.

(Visited 16 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!