சிங்கப்பூரில் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வெளியான தகவல்

சிங்கப்பூரில் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு மலிவுக் கட்டணத்தில் பல் மருத்துவச் சேவை வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
ஆண்டுதோறும் 4,000 ஊழியர்கள் அதன் மூலம் பயனடைய முடியும் என கூறப்படுகின்றது.
ஆறு ஆண்டுகளில் திட்டத்துக்கு 3 மில்லியன் வெள்ளி நிதி கிடைக்கும் என குறிப்பிடப்படுகின்றது.
மனநலம், பயிற்சி வழி சிகிச்சை போன்றவற்றுக்கும் திட்டத்தை விரிவுபடுத்துவது குறித்து ஆராயப்படுகிறது. வெளிநாட்டு ஊழியர் உறுப்பினர் திட்ட மேம்பாட்டின் மூலம் அது சாத்தியமாகும்.
நேற்று நடைபெற்ற மே தின நிகழ்ச்சியில் வெளிநாட்டு ஊழியர் நிலையமும் சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனத்தின் அறநிதியும் அதற்கான உடன்பாட்டைச் செய்து கொண்டன.
- பல் மருத்துவச் சேவைக்கு ஊழியர்கள் 30 வெள்ளி கட்டணம் செலுத்தினால் போதும். நிகழ்ச்சியில் 18,000 க்கும் அதிகமான ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
(Visited 11 times, 1 visits today)