வைத்தியசாலையில் இருந்து மீண்டும் CID சென்றார் சுரேஷ் சாலே!
அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே Major General Suresh Saleh மீண்டும் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு CID அழைத்துவரப்பட்டுள்ளார்.
திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
உரிய மருத்துவ சிகிச்சைகள் முடிவடைந்த பின்னர் அவர் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட சுரேஷ் சாலே, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், 90 நாள்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





