இஸ்ரேல் மத்திய பகுதியில் ஈரான் தாக்குதல்: அறுவர் காயம்!
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் இன்று 27ஆவது நாளாக தொடர்கின்றது.
ஈரான்மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் தாக்குதல்களை நடத்திவருகின்றன.
மறுபுறத்தில் இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்க தலங்கள்மீது ஈரானும் தாக்குதல்களை நடத்திவருகின்றது.
இந்நிலையில் இன்று ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இஸ்ரேலின் மத்தியப் பகுதியில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்தத் தாக்குதலில் காயமடைந்த ஆறு நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாகென் டேவிட் அடோம் அவசர சேவை அமைப்பு தெரிவித்துள்ளது.





