ஆஸ்திரேலியாவுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கிய சீனா
ஆஸ்திரேலிய பழங்களின் இறக்குமதியை இடைநிறுத்த விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டை நீக்க சீனா நடவடிக்கை எடுத்துள்ளது.
ஏறக்குறைய 02 வருடங்களாக நடைமுறையில் இருந்த அந்த நிபந்தனைகள் நீக்கப்பட்டதன் மூலம் ஆஸ்திரேலியாவின் பழ உற்பத்தியாளர்களுக்கு பெருமளவு நிம்மதி கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆஸ்திரேலிய உற்பத்தியாளர்கள் மாம்பழம், ஆரஞ்சு, செர்ரி உள்ளிட்ட பல வகையான பழங்களை சீனாவுக்கு மீண்டும் ஏற்றுமதி செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
கோவிட் வைரஸின் தோற்றத்தை கண்டறிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஆஸ்திரேலியா கருத்து தெரிவித்ததால் சீனாவுடனான உறவுகள் பாதிக்கப்பட்டன.
அதன்படி, 2020 ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியாவில் உற்பத்தி செய்யப்படும் பல வகையான பழங்கள், மாட்டிறைச்சி, ஒயின், பார்லி மற்றும் கடல் உணவுகள் மீதான இறக்குமதித் தடையை சீனா அறிமுகப்படுத்தியது.
சீனச் சந்தையின் இழப்பு காரணமாக, ஆஸ்திரேலியப் பொருட்களுக்கான இழப்பு ஆண்டுக்கு 20 பில்லியன் டொலர்களுக்கு மேல் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.