கனடாவை உலுக்கிய காட்டுத்தீ – அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பாதிப்பு!

கனடாவை உலுக்கும் காட்டுத்தீயால் அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க மாநிலங்களில் கடுமையான காற்றுத் தூய்மைக்கேடு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
வட அமெரிக்காவில் புகைமூட்டம் சூழ்ந்துள்ளது. நியூயோர்க் நகரில் காற்றுத் தூய்மைக்கேடு உலகின் ஆக மோசமான நிலையை எட்டியது.
உயர்தர முகக்கவசங்களை அணியும்படியும் கூடுமானவரை உட்புறங்களில் இருக்கும்படியும் அதிகாரிகள் மக்களுக்கு அறிவுறுத்திவருகின்றனர்.
விளையாட்டுப் பயிற்சிகள் உள்ளிட்ட வெளிப்புற நடவடிக்கைகளைப் பள்ளிகள் ரத்து செய்துவிட்டன.
பிலடெல்பியா (Philadelphia) நகரில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வீட்டிலேயே இருக்கும்படி குடியிருப்பாளர்களிடம் கூறப்பட்டது.
(Visited 11 times, 1 visits today)