இலங்கை செய்தி

இலங்கையில் மேண்டரின் ஆரஞ்சு இனத்தை பயிரிட நடவடிக்கை

இலங்கை மக்களின் அதிக தேவையுடைய இறக்குமதி செய்யப்பட்ட மேண்டரின் ஆரஞ்சு இனத்தை பயிரிட மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி வெற்றியளித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

பதுளை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களின் தாழ்வான பகுதிகள் மேண்டரின் ஆரஞ்சு பயிர்ச்செய்கைக்கு உகந்தவை என அடையாளம் காணப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை புதிய பயிர்ச்செய்கை திட்டங்களின் விஸ்தரிப்புக்கு பயன்படுத்துவது தொடர்பாக விவசாய அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில் இது தெரியவந்துள்ளது.

கண்டி, நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களை அண்மித்த பகுதிகளில் செவ்வாழை பயிர்ச்செய்கை வலயத்தை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர விவசாய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அதற்கு தேவையான நிதி ஒதுக்கீடுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!