அரசியல் இலங்கை செய்தி

ஆட்சி கவிழப்பு குறித்து மைத்திரி கூறுவது என்ன?

“தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை NPP எளிதில் வீழ்த்திவிடலாம் என எதிரணி கருதுவது யதார்த்தமற்ற விடயமாகும்.”

இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன Maithripala Sirisena தெரிவித்தார்.

எதிரணிகளின் ஒன்றிணைவு தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“ஆளுங்கட்சி வசம் 159 ஆசனங்கள் உள்ளன. இதனை பயன்படுத்தி தன்னை வலுப்படுத்திக்கொண்டு முன்னோக்கி செல்வதற்கே அரசாங்கம் முற்படும்.

மறுபுறத்தில் எதிரணிகள் தமது அரசியல் கடமையை நிறைவேற்ற முற்படும். அதற்காக பல கருத்துகள் முன்வைக்கப்படலாம்.

குறிப்பாக ஆட்சி கவிழ்ப்பு தொடர்பில் கதைக்கப்பட்டாலும் யதார்த்தத்தை புரிந்துகொள்ள வேண்டும்.

அதேவேளை, கல்வி மறுசீரமைப்பு எனது ஆட்சிகாலத்தில்தான் ஆரம்பமானது. நாட்டுக்கு பொருத்தமான கல்வி மறுசீரமைப்பு அவசியம்.” எனவும் Maithripala Sirisena கூறினார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!