ஐரோப்பா

இரு ஐரோப்பிய நாடுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை : சுற்றுலாப் பயணிகளின் கவனத்திற்கு!!

ஸ்பெயின் மற்றும்  போர்ச்சுகலுக்கு சீரற்ற வானிலைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பிரித்தானிய சுற்றுலாப் பயணிகள் அரையாண்டு பயணத்திற்கு தயாராகி வருவதால் வானிலைகள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே நேற்றைய தினம் ஸ்பெயினின் மலாக்கா மாகாணம் முழுவதும் கடுமையான மழைப் பொழிவு பதிவாகியதாக தெரிவிக்கப்படுகிறது.

12 மணி நேரத்திற்குள் சதுர மீட்டருக்கு 150 லிட்டரைத் தாண்டி மழை பெய்யக்கூடும் என்றும், 24 மணி நேரத்திற்குள் சதுர மீட்டருக்கு 200 லிட்டரைத் தாண்டி மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை அவதான நிலையம் கணித்திருந்த நிலையில் கனமழை பெய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக அண்டலூசியா முழுவதும் உள்ள பாடசாலைகள் நேற்றைய தினம் மூடப்பட்டிருந்தன.

இதற்கிடையே இந்த மாதத்தின் 08 ஆம் திகதி வரை சீரற்ற வானிலையே நீடிக்கும் என்றும் நாடு முழுவதும் பலத்த மழை மற்றும் வெள்ளம் ஏற்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று, வெள்ளம் நிலச்சரிவு மற்றும் பயண இடையூறுகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!