செய்தி

ரஜினியின் ஆசியுடன் நாயகனாகிறார் தனுஷின் மகன்!

தமிழக அரசியலில் மட்டும் அல்ல சினிமாவிலும் ‘வாரிசு’ ஆதிக்கம் தொடரவே செய்கின்றது.

இந்த வாரிசு பட்டியலில் புதிய ஒருவரும் சங்கமிக்கின்றார் என தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷின் மூத்த மகன் யாத்ரா Yatra நாயகனாக அறிமுகமாகவுள்ளார் என்பதே அந்த ‘லேட்டஸ்’ தகவலாகும்.

இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

தனுஷ் படங்களின் விழாக்களில் அவரது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா இருவரும் கலந்து கொள்வது வழக்கம்.

இருவருமே திரையுலகிற்கு மிகவும் பரிச்சியமானவர்கள். இதில் தனுஷின் மூத்த மகன் யாத்ரா நாயகனாக அறிமுகமாவது உறுதியாகி இருக்கிறது.

இதற்கான கதை உருவாக்கும் படலத்தில் மும்முரமாக இருக்கிறார் தனுஷ்.

தனுஷ் இயக்கத்தில் அவரது மகன் யாத்ரா அறிமுகமாக இருக்கிறாரா அல்லது கதையை மட்டும் கொடுத்து வேறொரு இயக்குநர் இயக்கவுள்ளாரா என்பது விரைவில் தெரியவரும் என்கின்றது சினிமா வட்டாரம்.

தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினருக்கு பிறந்தவர்கள் யாத்ரா மற்றும் லிங்கா.

சில வருடங்களுக்கு முன்பு இருவருமே விவகாரத்து பெற்றாலும், பிள்ளைகள் விவகாரத்தில் கலந்து ஆலோசித்து முடிவு எடுத்து வருகின்றனர்.

தனது பேரன் நாயகமான அறிமுகமாகும் அறிவிப்பை ரஜினி வெளியிடுவார் என நம்பப்படுகின்றது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!